ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

திசையன்விளை, ம.சு. பல்கலைக் கழகக் கல்லூரிக் கருத்தரங்கு (08 - 10. 01. 14)

      திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கிவரும் திசையன்விளை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகக் கல்லூரியின் தமிழ்த்துறை, சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் ‘ பிற்காலப் பொருளிலக்கண நூல்களில் தொல்காப்பியப் பொருளதிகார மரபும் மரபு மீறலும்’ என்னும் பொருண்மையில் மூன்று நாள் கருத்தரங்கு (08 - 10 . 01. 14) நிகழ்த்தியது. புதியன செய்யும் ஆர்வமும் தமிழன்பும் கொண்ட முனைவர் கோ. முத்துராசு அவர்கள் இக்கருத்தரங்கினை ஒருங்கிணைத்து நடத்தினார். சீரும் சிறப்புமாக நடைபெற்ற அக்கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்பும், தொல்காப்பியமும் இறையனார் அகப்பொருளும் என்னும் பொருளில் உரையாற்றும் சூழலும் முனைவர் கோ. முத்துராசு அவர்களால் வாய்த்தன. நல்லாய்வுத் திறமும் புலமையும் வாய்ந்த மூத்த அறிஞர் பெருமக்களும், குடியரசுத் தலைவரின் இளந்தமிழறிஞர் விருது பெற்ற அறிஞர்களும் பங்கேற்ற அக்கருத்தரங்கக் காட்சிகள் இவை. சில படங்கள் கிட்டாமையால் வெளியிட இயலவில்லை.


 கருத்தரங்க அழைப்பிதழ் முன்பக்கம்
கருத்தரங்க அழைப்பிதழ் பின்பக்கம்

 தொடக்கவிழா மேடையில் அறிஞர்கள்
 வரவேற்புரை : முனைவர் கோ. முத்துராசு அவர்கள்
  தலைமையுரை : கல்லூரி முதல்வர் முனைவர் ம. ஜோசப் இருதய சேவியர் அவர்கள்
வாழ்த்துரை : முனைவர் அ. இராமசாமி அவர்கள் (ஒருங்கிணைப்பாளர், ம.சு.ப. கல்லூரிகள்).
 தொடக்கப்பேருரை : முனைவர் ச. வே. சுப்பிரமணியன் அவர்கள் (மேனாள் இயக்குநர், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்). 
 முனைவர் தி. முத்து இலக்குமி அவர்களின் உரை : இறையனாரில் தோழி.
 முனைவர் சி. சிதம்பரம் அவர்களின் உரை: தொல்காப்பியமும் தமிழ்நெறி விளக்கமும்
 முனைவர் பெ. சுயம்பு அவர்களின் உரை : பொருளிலக்கணம் - பிற்கால வளர்ச்சி
 முனைவர் ப. மருதநாயகம் அவர்களின் உரை : தொல்காப்பியமும் இறையனார் களவியலும்
முனைவர் சு. சந்திரா அவர்களின் உரை : தொல்காப்பியமும் சுவாமிநாதமும்.

முனைவர் அ. செல்வராசு அவர்களின் உரை : தொல்காப்பியமும் இலக்கண விளக்கமும்


முனைவர் தி. செல்வம் அவர்களின் உரை : தொல்காப்பியமும் வீரசோழியமும்

 முனைவர் க. சுந்தர பாண்டியன் அவர்களின் உரை : தொல்காப்பியமும் மாறனகப்பொருளும்
 முனைவர் கு. சிவமணி அவர்களின் உரை : தொல்காப்பியமும் புறப்பொருள் வெண்பாமாலையும்
 முனைவர் சிவ. மாதவன் அவர்களின் உரை : தொல்காப்பியமும் பிற்கால அணியியல் நூல்களும்
முனைவர் இரா. சம்பத் அவர்களின் உரை : தொல்காப்பியமும் காக்கைபாடினியமும்

 முனைவர் உ. அலிபாவா அவர்களின் உரை : தொல்காப்பியமும் நம்பியகப் பொருளும்
 பேராசிரியர் கு. சிவமணி அவர்களின் நிறைவுப்பேருரை
 முனைவர் கோ. முத்துராசு அவர்களின் நன்றியுரை
 பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்குகின்றார் பேராசிரியர் கு. சிவமணி அவர்கள்
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோ. முத்துராசு அவர்களுக்கு ஆடை அணிவித்துப் பாராட்டுகின்றார் பேராசிரியர் கு. சிவமணி அவர்கள் 

கருத்தரங்கப் பின்புல உதவிகள் செய்த முனைவர் ஆ. மணி அவர்களுக்கு ஆடை அணிவித்துப் பாராட்டுகின்றார் பேராசிரியர் கு. சிவமணி அவர்கள் 


சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசுக் கலைக்கல்லூரிப் பயிலரங்கு (6,7.01.14)

  சிவகங்கை, மன்னர் துரைசிங்கம் அரசுக் கலைக்கல்லூரித் தமிழ்த்துறை சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையுடன் செம்மொழி இலக்கியங்கள் கற்றல்; கற்பித்தல்; ஆராய்தல் என்னும் தலைப்பில் பத்து நாள் (202.01.14 - 11.01.14) பயிலரங்கினை நடத்தியது. பயிலரங்கினைப் பேராசிரியரும் என் வாழ்விலும் வளர்ச்சியிலும் பெரிதும் அக்கறை கொண்டவருமாகிய முனைவர் ச. இராமமூர்த்தி அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். அப்பயிலரங்கில் தொல்காப்பிய அகத்திணை மரபுகளும் குறுந்தொகையும், ஆய்வுநோக்கில் குறுந்தொகைப் பதிப்பு வரலாறு ஆகிய தலைப்புக்களில் உரையாற்றும் வாய்ப்பினை வழங்கியதோடு, அறிமுகவுரையும் ஆற்றினார்  முனைவர் ச. இராமமூர்த்தி.  கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பழனியப்பன் அவர்கள் தலைமையில் அவ்வுரைகளை ஆற்றும் வாய்ப்பு அமைந்தது. பயிலரங்க உரைக்காட்சி இதோ.
சிவகங்கை மன்னர் அரண்மனையைக் காணும் வாய்ப்பும் அங்குக் கிடைத்தது. அப்படங்களும் இவண் தரப்பட்டுள்ளன.

 பயிலரங்க அழைப்பிதழ் முன்பக்கம்
பயிலரங்க அழைப்பிதழ் பின்பக்கம்
 முனைவர் ஆ. மணி அவர்களின் பயிலரங்க உரை : தொல்காப்பிய அகத்திணை மரபுகளும் குறுந்தொகையும். மேடையில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பழனியப்பன் அவர்கள். 
  முனைவர் ஆ. மணி அவர்களின் பயிலரங்க உரை : ஆய்வுநோக்கில் குறுந்தொகைப் பதிப்பு வரலாறு
 அரண்மனை நுழைவாயிலின் முன்னர் உள்ள அரசி வேலு நாச்சியார் பற்றிய குறிப்புக்கள்.
அரண்மனை நுழைவாயிலின் முன்னர் உள்ள அரசி வேலு நாச்சியார் சிலை.

 சிவகங்கை மன்னர் அரண்மனை (முன்புறத் தோற்றம்)
 சிவகங்கை மன்னர் அரண்மனை நுழைவாயில்.
 அரண்மனையில் உள்ள காவலர் பணிமாடம் (போலும்)
அரண்மனை முன்புறத் தோற்றம் உட்பகுதி.
 அரண்மனையின் உட்பகுதி.
அரண்மனையின் உள்ளே உள்ள கோயில்.

உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரிப் பட்டமளிப்பு விழா (04.01.14)

   புதுச்சேரி மாநிலம், திருக்கனூரில் இயங்கி வரும் உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியின் எட்டாவது பட்டளிப்பு விழா கடந்த 04.01.14 சனிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாக்களைக் கண்டு கொள்ளாமல் மறந்தும் மறைத்தும் விடுகின்ற கல்லூரிகளுக்கிடையே ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழாவை நிகழ்த்தி வரும் உஷா இலட்சுமணன் கல்லூரி நிருவாகத்தினர் பாராட்டுதலுக்குரியவர்கள்.
     கல்வியாளரும் நற்சிந்தனையாளருமாகிய கல்லூரிச் செயலர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில் அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளர் முனைவர் கணேசன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு, பட்டங்களை வழங்கிச் பட்டமளிப்பு விழாப் பேருரை நிகழ்த்தினார்.
        கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் முனைவர் அர்ஜுனன் அவர்களும், விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மேனாள் பேராசிரியர் பி. தனஞ்செயன் அவர்களும், புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ஆ. மணி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர் ஆர். திருமாவளவன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். விழா இனிதே நிறைவுற்றது. விழா ஏற்பாடுகளைக் கல்லூரியின் துணைமுதல்வர் பேராசிரியர் உஷா இலட்சுமணன் அவர்கள் தலைமையிலான ஆசிரியர்களும் மாணவர்களும் செய்திருந்தனர். கிடைத்துள்ள படங்கள் மட்டுமே இவண் தரப்பட்டுள்ளன.


அழைப்பிதழின் முதல் பக்கம்

அழைப்பிதழின் இரண்டாம் பக்கம்

 விழா மேடையில் சிறப்பு விருந்தினர்கள்
 சிறப்பு விருந்தினர் முனைவர் கணேசன் அவர்கள் விளக்கேற்றி வைத்தல்
 சிறப்பு விருந்தினர் முனைவர் ஆ. மணி அவர்கள் விளக்கேற்றி வைத்தல்
 கல்லூரிச் செயலர் முனைவர் மா. இலட்சுமணண் அவர்கள் விளக்கேற்றி வைத்தல்

 கல்லூரிச் செயலர் முனைவர் மா. இலட்சுமணண் அவர்கள்  தலைமையுரை ஆற்றுதல்
 முனைவர் கணேசன் அவர்கள் பட்டம் வழங்குதல்

 கல்லூரிச் செயலர் முனைவர் மா. இலட்சுமணன் அவர்கள் முனைவர் ஆ. மணி அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்
முனைவர் ஆ. மணி அவர்களின் வாழ்த்துரை





வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகத்தில் கலித்தொகை பற்றிய நாடளாவிய கருத்தரங்கு - அழைப்பிதழ்

           காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் பண்பாட்டியல் - சமூகவியல் - மொழியியல் நோக்கில் கலித்தொகை என்னும் பெயரிய நாடளாவிய அளவிலான கருத்தரங்கு எதிர்வரும் 12.02.14 புதன் கிழமை முதல் 14.02. 14 வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது. அண்மையில் இந்தியக் குடியரசுத் தலைவரின் இளந் தமிழறிஞர் விருது பெற்ற முனைவர் சி. சிதம்பரம் அவர்கள் இக்கருத்தரங்கினை ஒருங்கிணைத்து நடத்துகின்றார்.
        துறைசார் வல்லுநர்கள் பலர் பங்கேற்க உள்ள இக்கருத்தரங்கில் ஆர்வமுடையோர் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் பெற்றுப் பங்கேற்கலாம். வருக செந்தமிழ் பருக. அழைப்பிதழ் இதோ.


அழைப்பிதழ் முதல் பக்கம்
 அழைப்பிதழ் இரண்டாம் பக்கம்


சனி, 1 பிப்ரவரி, 2014

சாத்தூர், இராமசாமி நினைவுக் கல்லூரிக் கருத்தரங்கு (23.12.13)



சாத்தூர் ஏழாயிரம் பண்ணைச்சாலையில் உள்ள இராமசாமி நினைவுக் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் இயங்கி வரும் முத்தமிழ் மன்றத்தின் சார்பாகக் கல்லூரியின் நிதிக்கொடையில் சங்க இலக்கியக் கற்றல் என்னும் கருத்தரங்கு 23.12.13 (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்றது. விழாவிற்குத் தமிழன்பு சான்ற கல்லூரி முதல்வர் முனைவர் இராதா கிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கினார். கருத்தரங்கிற்கு அமைதியே வடிவாகவும், எழுச்சியே திருவாகவும் கொண்ட தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இராமநாதன் அவர்கள் பொறுப்பேற்றார். அன்புள்ளம் கொண்ட மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வே. தனுஜா அவர்கள் கருத்தரங்க நிகழ்வுகளை ஒருங்கிணைப்பு செய்தார். அறிவுத்தேடலும் தாகமும் கொண்ட முனைவர் மூ. கவிதா அவர்கள் ஒருங்கிணைப்பாளருக்குத் துணையாக இருந்து பணிகளை இணைத்துத் தந்தார். மேலும், கருத்தரங்கச் சிறப்பு விருந்தினர் அறிமுக உரையும் ஆற்றினார். அக்கருத்தரங்கில் முனைவர் ஆ. மணி அவர்கள் சங்க இலக்கியம் கற்றல் என்னும் தலைப்பில் உரையாற்றினார். விழாவில் மொழிப்பாடமாகத் தமிழ் பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியரும் பேராசிரியர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளைத் தமிழ்த்துறையினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.  கருத்தரங்க உரைக் காட்சிகள் இவை.

 விழா மேடையில் கல்லூரி முதல்வர் முனைவர் இராதாகிருஷ்ணன் அவர்கள், முனைவர் ஆ. மணி, தமிழ்த்துறைத் தலைவர் இராமநாதன் அவர்கள் ஆகியோர்.
 மாணவியரின் இறைவணக்கம்.

விழாத்தலைமையுரை : கல்லூரி முதல்வர் முனைவர் இராதாகிருஷ்ணன் அவர்கள்.

 கருத்தரங்கத் தலைமையுரை : துறைத்தலைவர் முனைவர் இராமநாதன் அவர்கள்.

 
 கல்லூரி முதல்வர் முனைவர் ஆ. மணி அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்.
 அறிமுக உரை : முனைவர் மூ. கவிதா அவர்கள்.
 முனைவர் ஆ. மணி அவர்களின் கருத்தரங்க உரை : சங்க இலக்கியம் கற்றல்.
 கருத்தரங்கில் பங்கேற்றோர்.
 கருத்தரங்கில் பங்கேற்றோர்.
 நன்றியுரை: தமிழ்த்துறைப் பேராசிரியர்.

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...