செவ்வாய், 30 செப்டம்பர், 2014

தமிழ் ஊடக வினாடி - வினா - 2014 (26.09.14)

        புதுவைத் தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறையில் தமிழ் ஊடக வினாடி - வினா - 2014 என்னும் நிகழ்ச்சி கடந்த 26.09.2014 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 02.30 மணியளவில் நடைபெற்றது. 
   இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு ஊடகவியல் - வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் என்னும் தாள் பயிற்றுவிக்கப்படுகின்றது. ஊடகம் சார்ந்த அப்பாடத்தை வெறுமனே வகுப்பறை அமைப்பில் நடத்துவதைவிட வினாடி - வினாப் போட்டி போல நடத்தினால் மாணவர்களுக்கு அது புதுமையாகவும் ஆர்வமூட்டும் வகையிலும் இருக்கும் என்பதால் இப்புதிய முயற்சி தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறையில் மேற்கொள்ளப்பட்டது. பொது அறிவு வினாடி - வினாப் போட்டிகள் பலவற்றை நீங்கள் கண்டிருப்பீர்கள். ஆனால் தமிழ் சார்ந்த வினாடி - வினாக்களைக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?. தமிழ்க்கல்வி வரலாற்றில் புதியதொரு முயற்சியாகக் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் தமிழ் இலக்கிய வினாடி  - வினா, தமிழ் இலக்கண வினாடி - வினா ஆகிய நிகழ்ச்சிகளைத் தாமே உருவாக்கி நடத்தி வரும் வினாடி - வினா இயக்குநர் முனைவர் ஆ. மணி முதன்முறையாகத் தமிழ் ஊடக வினாடி - வினா என்னும் இந்நிகழ்வையும் உருவாக்கி நடத்தினார். 
    போட்டியில் செந்தமிழ் அணி, வண்டமிழ் அணி, மென்தமிழ் அணி, பைந்தமிழ் அணி ஆகிய நான்கு அணியினர் பங்கேற்றனர். செந்தமிழ் அணியில் திரு. மணிகண்டன், திரு. சீனுவாசன் ஆகியோரும், வண்டமிழ் அணியில் திரு. சந்திரசேகரன், திரு. ஜெர்மியா கிருபாகரன் ஆகியோரும், மென்தமிழ் அணியில் திரு. பச்சையப்பன், திரு. செல்வமணி ஆகியோரும், பைந்தமிழ் அணியில் செல்வி. யாழினி, செல்வி. சுகுணா ஆகியோரும் பங்கேற்றனர். மதிப்பீட்டாளர்களாகச் செல்வி. அனுப்பிரியா, இராஜலட்சுமி ஆகியோர் பங்காற்றினர். கணினி இயக்குநர்களாக முனைவர் ந. இராணி அவர்களும், முனைவர் நா. காயத்ரி அவர்களும் தங்கள் பங்களிப்பை செய்தனர்.
          ஐந்து சுற்றுக்களாக நடந்த அப்போட்டியில் பைந்தமிழ் அணியின் செல்வி. யாழினி, செல்வி. சுகுணா ஆகியோர் முதல் பரிசையும், மென்தமிழ் அணியின் திரு. பச்சையப்பன், திரு. செல்வமணி ஆகியோர் இரண்டாம் பரிசையும் பெற்றனர்.
         போட்டியின் முடிவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. பிற்பகல் நான்கு மணிக்குத் தொடங்கிய அவ்விழாவுக்குத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தி. செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார். அவர்தம் தலைமையுரையில் இதுபோன்ற புதிய முயற்சிகள் வரவேற்புக்குரியன. ”சாக் அண்ட் டாக்” முறையைவிட இவ்வகைக் கற்பித்தல் முறைகள் பாராட்டுக்குரியன என்றார்.
        வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்புரையாற்றிய கல்லூரி முதல்வர் முனைவர் உ.பிச்சைமணி அவர்கள் தமிழ்த்துறையின் இப்புதுமை முயற்சிகள் பாராட்டிற்குரியன. இன்றைய உலகம் ஊடக உலகம். அதனை நினைவில் கொள்ளும் வகையில் ஊடகங்களைப் பற்றிய இந்நிகழ்வு நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கின்றது என்று கூறி, பரிசு பெற்ற மாணவர்களைப் பாராட்டினார். 
          விழாவில் முனைவர் ஆ. மணி வரவேற்புரையாற்றினார். இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு மாணவி செல்வி த.சபிதா நன்றி கூறினார். விழாவில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேரசிரியர்களும், மாணவர்களும் பங்கேற்றனர். நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. விழாக்காட்சிகள் இதோ:

 பிரஞ்சுப் பேராசிரியர் முனைவர் சு.அ.வெங்கட சுப்பராய நாயகரை வரவேற்கும் மாணவியர்
 பார்வையாளர் பகுதியில் முனைவர் நா.வஜ்ரவேலு, முனைவர் கு.ஞானகுரு, முனைவர் வீ.மணி, முனைவர் ஆ.மணி அகியோர்
 பார்வையாளர் பகுதியில் முனைவர் நாயகர், முனைவர் வீ.மணி, முனைவர் கண்ணன், முனைவர் மு. இளங்கோவன் அகியோர்
வினாடி - வினா இயக்குநர் முனைவர் ஆ.மணி

கணினி இயக்கம்: முனைவர் நா. காயத்ரி, முனைவர் ந.இராணி ஆகியோர்.
 போட்டியாளர்கள்

 போட்டியாளர்கள்
 வரவேற்புரை : முனைவர் ஆ.மணி
 தலைமையுரை : முனைவர் தி. செல்வம் (தமிழ்த்துறைத் தலைவர், தாகூர் கலைக்கல்லூரி) அவர்கள்.
 கல்லூரி முதல்வர் முனைவர் உ. பிச்சைமணி அவர்களுக்குத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தி.செல்வம் அவர்கள் சிறப்புச் செய்தல்
முனைவர் ஆ.மணி அவர்கள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தி.செல்வம் அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்

 கல்லூரி முதல்வர் முனைவர் உ.பிச்சைமணி அவர்களின் சிறப்புரை

 முதல் பரிசு : பைந்தமிழ் அணியினர் - செல்வி. யாழினி, செல்வி. சுகுணா ஆகியோருக்குக்  கல்லூரி முதல்வர் முனைவர் உ.பிச்சைமணி அவர்கள் பரிசு வழங்குதல்.
 இரண்டாம் பரிசு : மென்தமிழ் அணியினர் - திரு. பச்சையப்பன், திரு. செல்வமணி ஆகியோருக்குக்  கல்லூரி முதல்வர் முனைவர் உ.பிச்சைமணி அவர்கள் பரிசு வழங்குதல்.
 கல்லூரி முதல்வர் முனைவர் உ.பிச்சைமணி அவர்கள் திரு சந்திரசேகரன் அவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ் வழங்குதல்.
 கல்லூரி முதல்வர் முனைவர் உ.பிச்சைமணி அவர்கள் திரு ஜெர்மியா கிருபாகரன் அவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ் வழங்குதல்.
 கல்லூரி முதல்வர் முனைவர் உ.பிச்சைமணி அவர்கள் திரு சீனுவாசன் அவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ் வழங்குதல்.
 கல்லூரி முதல்வர் முனைவர் உ.பிச்சைமணி அவர்கள் திரு மணிகண்டன் அவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ் வழங்குதல்.
நன்றியுரை: செல்வி த.சபிதா அவர்கள், இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு
 அழைப்பிதழ் - 1
அழைப்பிதழ் - 2

சனி, 21 ஜூன், 2014

தமிழ் ஆண்டுகளும் அவற்றுக்கு நிகரான ஆங்கில ஆண்டுகளும்

      தொல்காப்பியர் காலத்திற்கு முன்னர் இருந்தே ஒரு நாளின் பொழுதுகளைச் சிறுபொழுதுகள் என்றும், ஓர் ஆண்டின் பொழுதுகளைப் பெரும்பொழுதுகள் என்றும் பகுத்து வழங்கியோர் தமிழர். ஒரு பொழுது என்பது பத்து நாழிகைகளைக் கொண்டது.  ஒரு நாழிகை என்பது தற்போதைய வழக்கில் சொல்வதானால் 24 நிமிடம் ஆகும். ஒரு மணி நேரம் என்பது இரண்டரை நாழிகை ஆகும். ஒரு சிறுபொழுது என்பது நான்கு மணி நேரமாகும். ஆறு சிறுபொழுதுகளைக் கொண்ட ஒரு நாள் என்பது 60 நாழிகைகளைக் கொண்டது. ஒரு நாளின் பொழுதுகளை விடியல், நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை எனப் பெயரிட்டழைத்தனர். அதுபோன்றே, ஓர் ஆண்டு என்பது ஆறு பெரும்பொழுதுகளைக் கொண்டதாகும். ஒரு பெரும்பொழுது என்பது இரு மாதங்களாகும். கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் என்பன ஓர் ஆண்டின் பொழுதுகளாகும். இப்படிக் காலத்தைக் கணித்து வைத்த காலக்கணிதர் இருந்த முற்காலத் தமிழகத்தில் ஆண்டுவரிசை ஏதுமில்லை எனப் பலரும் மொழிவதுதான் வியப்புக்குரியது. தமிழர்தம் ஆண்டுவரிசைக் கணக்கினைப் பற்றித் தற்போது போதிய செய்திகள் கிட்டாமையால் அதனைப் பின்னர்க் காண்போம். 
       தமிழ் ஆண்டுகள் என்று கூறப்படுகின்ற 60 ஆண்டுகளின் பெயர்தானும் தமிழ் இல்லை. எனினும், 19, 20ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலப் பதிப்புக்களை ஆய்வு செய்வாருக்குப் பயன்படும் வகையில் அவற்றுக்கு நிகரான தமிழாண்டுகள் இவண் தரப்படுகின்றன.

 தமிழ் ஆண்டுகளும் அவற்றுக்கு நிகரான ஆங்கில ஆண்டுகளும்


1. பிரபவ
1807 -
1808
1867 -
1868
1927 -
1928
1987 -
1988
2047 -
2048
2. விபவ
1808 -
1809
1868 -
1869
1928 -
1929
1988 -
1989
2048 -
2049
3.சுக்கில
1809 -
1810
1869 -
1870
1929 -
1930
1989 -
1990
2049 -
2050
4. பிரமோதூத
1810 -
1811
1870 -
1871
1930 -
1931
1990 -
1991
2050 -
2051
5. பிரசோற்பத்தி
1811 -
1812
1871 -
1872
1931 -
1932
1991 -
1992
2051 -
2052
6. ஆங்கீரச
1812 -
1813
1872 -
1873
1932 -
1933
1992 -
1993
2052 -
2053
7. ஸ்ரீமுக
1813 -
1814
1873 -
1874
1933 -
1934
1993 -
1994
2053 -
2054
8. பவ
1814 -
1815
1874 -
1875
1934 -
1935
1994 -
1995
2054 -
2055
9. யுவ
1815 -
1816
1875 -
1876
1935 -
1936
1995 -
1996
2055 -
2056
10. தாது
1816 -
1817
1876 -
1877
1936 -
1937
1996 -
1997
2056 -
2057
11. ஈஸ்வர
1817 -
1818
1877 -
1878
1937 -
1938
1997 -
1998
2057 -
2058
12. வெகுதானிய
1818 -
1819
1878 -
1879
1938 -
1939
1998 -
1999
2058 -
2059
13. பிரமாதி
1819 -
1820
1879 -
1880
1939 -
1940
1999 -
2000
2059 -
2060
14. விக்கிரம
1820 -
1821
1880 -
1881
1940 -
1941
2000 -
2001
2060 -
2061
15. விஷூ
1821 -
1822
1881 -
1882
1941 -
1942
2001 -
2002
2061 -
2062
16. சித்திரபானு
1822 -
1823
1882 -
1883
1942 -
1943
2002 -
2003
2062 -
2063
17. சுபானு
1823 -
1824
1883 -
1884
1943 -
1944
2003 -
2004
2063 -
2064
18. தாரண
1824 -
1825
1884 -
1885
1944 -
1945
2004 -
2005
2064 -
2065
19. பார்த்திப
1825 -
1826
1885 -
1886
1945 -
1946
2005 -
2006
2065 -
2066
20. விய
1826 -
1827
1886 -
1887
1946 -
1947
2006 -
2007
2066 -
2067
21. சர்வசித்து
1827 -
1828
1887 -
1888
1947 -
1948
2007 -
2008
2067 -
2068
22. சர்வதாரி
1828 -
1829
1888 -
1889
1948 -
1949
2008 -
2009
2068 -
2069
23. விரோதி
1829 -
1830
1889 -
1890
1949 -
1950
2009 -
2010
2069 -
2070
24. விக்ருதி
1830 -
1831
1890 -
1891
1950 -
1951
2010 -
2011
2070 -
2071
25. கர
1831 -
1832
1891 -
1892
1951 -
1952
2011 -
2012
2071 -
2072
26. நந்தன
1832 -
1833
1892 -
1893
1952 -
1953
2012 -
2013
2072 -
2073
27. விஜய
1833 -
1834
1893 -
1894
1953 -
1954
2013 -
2014
2073 -
2074
28. ஜய
1834 -
1835
1894 -
1895
1954 -
1955
2014 -
2015
2074 -
2075
29. மன்மத
1835 -
1836
1895 -
1896
1955 -
1956
2015 -
2016
2075 -
2076
30. துன்முகி
1836 -
1837
1896 -
1897
1956 -
1957
2016 -
2017
2076 -
2077
31. ஹேவிளம்பி
1837 -
1838
1897 -
1898
1957 -
1958
2017 -
2018
2077 -
2078
32. விளம்பி
1838 -
1839
1898 -
1899
1958 -
1959
2018 -
2019
2078 -
2079
33. விகாரி
1839 -
1840
1899 -
1900
1959 -
1960
2019 -
2020
2079 -
2080
34. சார்வரி
1840 -
1841
1900 -
1901
1960 -
1961
2020 -
2021
2080 -
2081
35. பிலவ
1841 -
1842
1901 -
1902
1961 -
1962
2021 -
2022
2081 -
2082
36. சுபகிருது
1842 -
1843
1902 -
1903
1962 -
1963
2022 -
2023
2082 -
2083
37. சோபகிருது
1843 -
1844
1903 -
1904
1963 -
1964
2023 -
2024
2083 -
2084
38. குரோதி
1844 -
1845
1904 -
1905
1964 -
1965
2024 -
2025
2084 -
2085
39. விசுவாசுவ
1845 -
1846
1905 -
1906
1965 -
1966
2025 -
2026
2085 -
2086
40. பரபாவ
1846 -
1847
1906 -
1907
1966 -
1967
2026 -
2027
2086 -
2087
41. பிலவங்க
1847 -
1848
1907 -
1908
1967 -
1968
2027 -
2028
2087 -
2088
42. கீலக
1848 -
1849
1908 -
1909
1968 -
1969
2028 -
2029
2088 -
2089
43. சௌமிய
1849 -
1850
1909 -
1910
1969 -
1970
2029 -
2030
2089 -
2090
44. சாதாரண
1850 -
1851
1910 -
1911
1970 -
1971
2030 -
2031
2090 -
2091
45. விரோதிகிருது
1851 -
1852
1911 -
1912
1971 -
1972
2031 -
2032
2091 -
2092
46. பரிதாபி
1852 -
1853
1912 -
1913
1972 -
1973
2032 -
2033
2092 -
2093
47. பிரமாதீச
1853 -
1854
1913 -
1914
1973 -
1974
2033 -
2034
2093 -
2094
48. ஆனந்த
1854 -
1855
1914 -
1915
1974 -
1975
2034 -
2035
2094 -
2095
49. ராட்சச
1855 -
1856
1915 -
1916
1975 -
1976
2035 -
2036
2095 -
2096
50. நள
1856 -
1857
1916 -
1917
1976 -
1977
2036 -
2037
2096 -
2097
51. பிங்கள
1857 -
1858
1917 -
1918
1977 -
1978
2037 -
2038
2097 -
2098
52. காளயுக்தி
1858 -
1859
1918 -
1919
1978 -
1979
2038 -
2039
2098 -
2099
53. சித்தார்த்தி
1859 -
1860
1919 -
1920
1979 -
1980
2039 -
2040
2099 -
2100
54. ரௌத்திரி
1860 -
1861
1920 -
1921
1980 -
1981
2040 -
2041
2100 -
2101
55. துன்மதி
1861 -
1862
1921 -
1922
1981 -
1982
2041 -
2042
2101 -
2102
56. துந்துபி
1862 -
1863
1922 -
1923
1982 -
1983
2042 -
2043
2102 -
2103
57. ருத்ரோத்காரி
1863 -
1864
1923 -
1924
1983 -
1984
2043 -
2044
2103 -
2104
58. ரக்தாட்சி
1864 -
1865
1924 -
1925
1984 -
1985
2044 -
2045
2104 -
2105
59. குரோதன
1865 -
1866
1925 -
1926
1985 -
1986
2045 -
2046
2105 -
2106
60. அட்சய
1866 -
1867
1926 -
1927
1986 -
1987
2046 -
2047
2106 -
2107
  

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...